Emblem and Flag

கல்லூரி சின்னம் (Emblem)

1923ம் ஆண்டு அமரர் திரு.V.வீரசிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் பாடசாலைக்கான இலச்சினை வடிவமைக்கப்பட்டது.

கல்லூரி இலச்சினையின் மத்தியில் இலங்கை படம் உள்ளது. அதனைச் சுற்றி ஓலைச்சுவடி, ஓம், தாமரை, கை என்பவற்றை அடையாளமாகக் கொண்ட நான்கு பிரிவுகள் இலச்சினையில் உள்ளன. அவற்றின் பொருள் பின்வருமாறு

ஓலைச்சுவடி – கலை
ஓம் – ஆன்மா
தாமரை – இதயம்
கை – வலிமை

இவற்றின் ஒன்றிய செயற்பாட்டின் மூலம் இலங்கை ஒளி பெறுகின்றது என்பது இவ் இலச்சினையின் அர்த்தமாகும்.

இலச்சினையின் மேற்பகுதியில் பாடசாலையின் பெயரும், கீழ்ப்பகுதியில் பாடசாலையின் மகுட வாசகமும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இரு பக்கங்களிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு உள்ளடக்கப்பட்டுள்ளது.

Manipay Hindu College

கல்லூரியின் கொடி (Flag)