Our Principal

Mr.S.Ilango
(SLEAS, SLPS I, PGDEM, M.Ed(Hons))

Principal’s Message

இணையத்தை கையாளத்தெரிந்தவன் உலகப்பந்தில் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்கின்றான்.

கல்லூரிகள் தமது வளர்ச்சிப்படிநிலையில் தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்கான அடையாளங்களை மேற்கொண்டு வருகின்றன. கல்லூரிகளது செயற்பாட்டினை அறிந்துகொள்வதற்கான ஆதாரங்களாக ஆவணப்படுத்தப்படுகின்ற செயற்பாடுகள் இன்றியமையாததாகும்.

அப்பகைப்புலத்தில் நூற்றாண்டுப்பழமையும் கல்வி இணைபாடவிதானச்செயற்பாட்டில் அறாத்தொடர்ச்சியும் கொண்ட கல்லூரியான மானிப்பாய் இந்துக்கல்லூரியின் இன்னொரு செயற்பாட்டை அடையாளப்படுத்துவதாக அமைகின்ற இணையத்தள செயற்பாட்டினை ஆரம்பித்து வைப்பதில் கல்லூரியின் முதல்வர் என்கின்ற வகையில் மகிழ்வடைகின்றேன்.

www.ManipayHinduCollege.lk என்பது எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகும். கல்லூரியின் செயற்பாடுகளையும், சாதனைகளையும் அறிந்து கொள்வதற்கான வாயில் திறப்பாக எமது கல்லூரியின் இணையத்தளம் அமையுமென்பது கண்கூடு. கல்லூரிக்காக உருவாக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளம் கல்லூரியின் மற்றுமொரு அடையாளமாகும்.