நிறுவுநர் தினமும், பரிசுத் தினமும் 2023

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 2023ம் ஆண்டிற்கான நிறுவுநர் தினமும், பரிசளிப்பு விழாவும் ஜூலை 4ம் திகதி கல்லூரியின் அதிபர் திரு.செ.இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.ஜெனாட் பிறட்லி அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், வைத்திய அதிகாரியுமான திரு.K.S.சயந்தன் (அவிசாவளை ஆதார வைத்தியசாலை) அவர்கள் கலந்துகொண்டார்.

கெளரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், இணுவில் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமான திரு.அ.சதானந்தன் அவர்கள் கலந்துகொண்டார்.