காண்பிய ஊடக கழகம்  (Visuval Media Club) 

நோக்கம்

கல்லுரியில் கல்வி பயில்கின்ற எத்துறை சார்ந்த மாணவர்களதும் திறன்களை வெளிக்கொனர்வதற்கு களம் அமைத்தல்,

இக்கழகத்தினூடாக செயற்படுத்தப்படவேண்டிய செயற்பாடுகள்

🔵 பாடசாலை நிகழ்வுகளை ஆவனப்படுத்தல்
🔵 பாடல் இறுவெட்டுக்களை வெளியிடல்.
🔵 புகைப்படக்கண்காட்சி நடாத்தல்.
🔵 பத்திரிகை வெளியிடல்.

செயற்பாடுகள் ஓர் நோக்கு (2013-2018)

2013ம் ஆண்டு காண்பிய ஊடக கழகம்  (Visuval Media club) கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் அவர்களது வழிகாட்டலில் எஸ்.ரி.அருள்குமரன் ஆசிரியரின் எண்ணத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.   

ஸ்தாபகர் குழுவில் மாணவர்களான எஸ்.நிஜந்தன், ஐ.திசாங்கன், எஸ்.யோசுவபிசாத், றொசான், சோ.சுபிதன் ஆகிய மாணவர்கள் அங்கம் வகித்தனர்.

இக்கழகத்திற்கான இலட்சனை கல்லூரி மாணவன் சோ.சுபிதனால் ஒரு இரவில் வடிவமைக்கப்பட்டது. அதற்கான மகுட வாசகமான “எனக்குள் உலகம்” எனும் வாசகம் சுபிதனது வேண்டுகோளிற்கினங்க எஸ்.ரி.அருள்குமரன் ஆசிரியரால் எழுதப்பட்டது.

முதலாவது அணி (2013-2015)

போசகர் : எஸ்.சிவநேஸ்வரன் (அதிபர்)
பொறுப்பாசிரியர் : எஸ்.ரி.அருள்குமரன்
தலைவர் : எஸ்.நிஐந்தன்
உபதலைவர் : யோசுவபிரசாத்
செயலாளளர் : பா.ஐயரூபன்
உபசெயலாளர் : அபிசாந்
பொருளாளர் : விஸ்னுகாந்
வடிவமைப்பாளர் : சுபிதன், திசாங்கன்

செயற்பாடுகள்
+ இசையின் முகங்கள் (Face of Music)  எனும் இறுவட்டு 2014ம் ஆண்டு கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் வெளியிட்டது.
இவ் இறுவட்டானது மாணவர்களது முழுமையான பங்களிப்பிலும் அவர்களது எண்ணத்திற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும் பணியினை கல்லூரியின் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டிருந்தார்.

+ 2015ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலில் கல்லூரி நினைவுகளை தாங்கிய வகையிலான பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டது.

+ பாடசாலை நிகழ்வுகளை புகைப்படங்களாக ஆவனப்படுத்தல்.                

இரண்டாவது அணி (2015-2016)

செயற்பாடுகள்
+ பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின்  எண்ணத்திலும் கல்லூரிமுதல்வரது வழிகாட்டலிலும் மாணவர்களது கூட்டினைப்பிலும்  முதல்தடவையாக ஒளிப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

மூன்றாவது அணி (2016-2017)
 
செயற்பாடுகள்,
+ காலைப்பிரார்தனையில் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி முதல்தடவையாக பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின் எண்ணத்திலும் கல்லூரி முதல்வர் எம்.இந்திரபாலாவின் வழிகாட்டலிலும் மாணவர்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

+ பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனின் எண்ணத்திலும் கல்லூரி முதல்வர் எம்.இந்திரபாலாவின் வழிகாட்டலிலும் “மானியின் குரல்” எனும் பத்திரிகை மாணவர்களது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் களம் அமைத்து கொடுக்கும்வகையிலும், பாடசாலை நிகழ்வுகளை ஆவணப்படுத்துகின்றவகையிலும் முதல்தடவையாக வெளியிடப்பட்டது.

நான்காவது அணி
 
செயற்பாடுகள்,
+ புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது
+ மானியின் குரல் நான்காவது, ஐந்தாவது இதழ் வெளியிடப்பட்டது.
+ ஆசிரியர் தின விழாவில் “அகழ்வி” எனும் இறுவட்டு வெளியிடப்பட்டது.
+ “அவதானம்” எனும் குறும்படம் வெளியிடபட்டது.
+ கணித-விஞ்ஞான கண்காட்சியனை வீடியோவாக ஆவனப்படுத்தப்ட்டது.

ஐந்தாவது அணி (2018)

செயற்பாடுகள்,
+ லண்டன் பழைய மாணவர் சங்கத்தினாரால் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு தொடர்பான ஆவனப்படம் தயாரிக்கப்பட்டது.
+ பழைய மாணவர்அரியரட்னம் கிருஸ்னதாசனின் அனுசரனையில் பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலே குறும்படப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
+ பரிசளிப்பு விழா வீடியோ பதிவாக ஆவணப்படுத்தப்பட்டது.
+ மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது வீடியோவாக ஆவனப்படுத்தப்பட்டது.
+ ஒளிப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.